மயிலாடுதுறை, ஏப்ரல்- 19:
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, திரையரங்கு உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கீழ நாஞ்சில் நாடு கடை என் 1 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினையும், தம்பிக்கு நல்லான் பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் காலை இணை உணவு (கொழுக்கட்டை) குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதனையும், தம்பிக்கு நல்லான் பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சுகாதார துறையின் சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதையும், தம்பிக்கு நல்லான் பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை கற்பிக்கும் முறையினையும் மவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறை, நீரினால் வாகனங்கள் கழுவும் இடம். கழிப்பறை போன்ற இடங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள ரத்னா மற்றும் பியர்லெஸ் திரையரங்குகளில் தமிழக அரசின் சாதனை விளக்க செய்தி மலர் ஒளிபரப்பு செய்யப்படுகிறதா, கழிப்பறை, “சி’ படிவம், தீயணைப்பான் கருவி போன்றவைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்