0 0
Read Time:2 Minute, 27 Second

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். அதில், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியல்கள் வெளியாகின.

சுமார் 1.30 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சொத்துப் பட்டியல் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவரும் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை கண்டித்து அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டு முன்பு குவிந்த திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %