தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூரிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இருப்பினும் மழை சிறிது நேரமே பெய்ததால், தேங்கி நின்ற நீரும் சற்று நேரத்தில் வற்றி, மழை பெய்த சுவடே தெரியாமல் போய் விட்டது. இருப்பினும் கோடை வெயிலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த திடீர் மழை சற்று ஆறுதலை தந்தது.
இதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, கொத்தவாச்சேரி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறிது நேரம் பரவலாக மழை பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 36.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 5.86 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
குறிஞ்சிப்பாடி-25, காட்டுமன்னார்கோவில்-24, லால்பேட்டை -21, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு தலா 7.2, புவனகிரி- 7, பரங்கிப்பேட்டை- 5.6, கொத்தவாச்சேரி -5, ஸ்ரீமுஷ்ணம்-4.1, அண்ணாமலைநகர் -2, கடலூர்-1.6, கலெக்டர் அலுவலகம்-0.6.