0 0
Read Time:1 Minute, 53 Second

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் வெகு விரைவில் வரும் என்று தஞ்சையில் தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

தஞ்சையில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்டம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கொடுத்தவர்.மேலும், டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைய ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். வெகுவிரைவில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் அமையும்.

டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினம். யாரேனும் நிலத்தை தாமாக முன்வந்து கொடுக்க வந்தால், சிறிய அளவிலான விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சிறப்பான திட்டங்கள் வெகுவிரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும். அறுவடைக்கு பிறகு அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

இந்த அமைச்சர் பதவி என்பது எனக்கானது மட்டுமல்ல அனைவருக்கும் ஆன
பதவி , மேலும், முதலமைச்சர் டெல்டாக்காரன் என சொன்னபோதே நாங்கள் அனைவரும்
அமைச்சராகி விட்டோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %