கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.5.2023) அன்று மாலை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாசன நாள் விழா மிட் டவுன் ரோட்டரி அரங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது சங்க சாசன நாள் விழா, உடல் தானம் அளிப்பு விழா, உலக தாய்மார்கள் தின விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
விழாவை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க தலைவர் எஸ். பிரகதீஸ்வரன் தலைமையேற்று நடத்தினார்.
சிறப்பு விருந்தினராக கும்பகோணத்தில் இருந்து ரோட்டரி மாவட்டம் 2981 -ன் உறுப்பினர் வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ். ஆர். கணேஷ் அவர்கள் கலந்துகொண்டு சாசன உறுப்பினர்களுக்கு பொன்னாடையும் நினைவு பரிசையும் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
சாசனத் தலைவர் ஞான அம்பலவாணன், சாசன செயலாளர் ஏ. எஸ். கேசவன் மற்றும் சாசன உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் எஸ். சஞ்சீவி, எஸ். மோகன், கதிரேசன், ந. பஞ்சநதம், எஸ் புகழேந்தி எஸ். மணிவண்ணன் கே. நாகராஜன், தில்லை கோவிந்தராஜன், கே. கோவிந்தராஜன், எவரெஸ்ட் கோவிந்தராஜன், என். பாலசுப்பிரமணியன், ஆர். எஸ். ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் ஆர். செந்தில் குமார்,சி.தியாகராஜன்,
கே.நிர்மலா, பாலாஜி, ஏ.ரகுபதி, பொருளாளர் எல். சி.ஆர். நடராஜன் ஆகியோரும்,
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் முகமது யாசின், சீனிவாசன், பண்ணாளால், புகழேந்தி பொருளாளர் என்.கேசவன் ஆகியோரும், சிதம்பரம் மெயின் ரோட்டரி சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் ராஜசேகரன் மற்றும் சோனா பாபு, சிதம்பரம் டெம்பிள் டவுன் முன்னாள் தலைவர் அனந்தராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட கண் ரத்தம் உடல் தான சங்கத் தலைவர் ராமச்சந்திரன் அவர்கள், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் தில்லை கோவிந்தராஜன் மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த முதியவர் வாசுதேவன் இருவரிடமும் உடல் தானத்திற்கான படிவங்களை பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்பு ரோட்டரி சங்கத்தினால் அவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
உலக தாய்மார்கள் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சங்கத்தில் முன்னாள் தலைவர் என். பாலசுப்பிரமணியன் அவர்களுடைய துணைவியார் மற்றும் அவர்களுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மிட் டவுன் ரோட்டரி சங்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி அவர்கள் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவருக்கு உதவி ஆளுநர் எம். தீபக் குமார் ரோட்டரி பின் அணிவித்து, ரோட்டரி குடும்பத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் இறுதியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் க. சின்னையன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி