0 0
Read Time:5 Minute, 21 Second

செம்பனார்கோயில், மே.22;
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தின் திமுக மூத்த முன்னோடியும், கழகத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம்.அன்பழகன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோரின் தந்தையுமான முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பெரியார் விருது பெற்ற மிசா.பி. மதிவாணன் கடந்த 4-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனை அறிந்த உடனேயே கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக.ஸ்டாலின், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செம்பனார்கோயிலில் உள்ள பி கே சி திருமண மண்டபத்தில் மிசா.பி.மதிவாணனின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜி.என்.ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், சித்ரா அன்பழகன், கழக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பிஎம்.ஸ்ரீதர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு மிசா.பி.மதிவாணனின் திருவுருவ படத்தை திறந்து வைத்து, மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கழகத்தினர், அவரது படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியை முன்னிட்டு செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 9 மாணவர்களுக்கு மிசா பி.மதிவாணன் அறக்கட்டளை சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

முன்னதாக மிசா.பி.மதிவாணனின் வரலாறு குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தஞ்சை மாவட்ட செயலாளரும், எம்பியுமான கல்யாணசுந்தரம், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகரன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், சாக்கோட்டை அன்பழகன், நாஜீம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சத்தியசீலன், விஜயபாலன், அன்பழகன், அருள்செல்வன், ஜெகவீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஹேப்பி அர்ஷத், வழக்கறிஞர் சிவதாஸ் மற்றும் கழக மாவட்ட செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பிற கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்

செம்பனார்கோயிலில், திமுக மூத்த முன்னோடி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பெரியார் விருது பெற்ற மிசா.பி.மதிவாணனின் திருவுருவ படத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %