ஆவின் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அரசுக்கு கோரிக்கை!
அவர் குறிப்பிடுகையில்,
“தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் விரைவில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை தொடங்க உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் பாட்டில்களில் குடிநீர் விற்பனையை தொடங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆவின் நிறுவனம் மீது மக்களுக்கு அதிக ஈர்ப்பு தன்மை உள்ளது. அதனால் அதிக அளவிலான குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சேவை நிறுவனமான ஆவின் குடிநீர் பாட்டில்களின் விலையை ஒரு லிட்டருக்கு ரூபாய் 10 என்று நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும். ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது அம்மா குடிநீர் பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது அது தற்பொழுது இயங்காத காரணத்தினால் ஆவின் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள் பொது இடங்களில் ஆவின் பாலகம் மற்றும் ஆவின் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். அக்கடைகள் வாயிலாக குடிநீர் விற்பது என்பது எளிதில் பொதுமக்களை சென்றடையும் என்பது உறுதி.
ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களும், மக்களின் நலன் கருதி குடிநீர் பாட்டில் விற்பனை விலையை பத்து ரூபாயாக அறிவித்து உத்தரவிட வேண்டும் என்று கோருகிறோம்”.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.