மயிலாடுதுறை, மே- 26:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை-அரங்கக்குடி, புது தெருவை சேர்ந்தவர் எபினேசர் என்பவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. எபினேசர் அவரது மனைவி மெர்சி இரண்டு பெண் குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மின் கசிவின் காரணமாக கூரை வீடு எரிந்து சேதம் அடைந்துள்ளது.
திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களும் தீயை அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வீட்டின் கூரை மற்றும் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து கருகி முற்றிலும் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் வீட்டின் உரிமையாளர் எபினேஷரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
இதேபோல் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி அர்ஷத் ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், கவுன்சிலர மதினா பர்வீன் சேக்அலாவுதீன், கிளைச் செயலாளர் ராமதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் புது தெரு கிராம மக்கள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்