மயிலாடுதுறை, ஜூலை- 06:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கப்படவுள்ள தொகுதி-1&2 மற்றும் தொகுதி-4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 08.07.2023 சனிக்கிழமையன்று தொடங்குவது தொடர்பாக மரியாதைக்குரிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தொகுதி-1&2 மற்றும் தொகுதி -4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. தொகுதி-1&2 தேர்விற்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் தொகுதி-4 தேர்விற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் இத்தேர்வுகள் குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் போன்ற இதர விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையத்தள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தொகுதி-1&2 மற்றும் தொகுதி-4 விளம்பர அறிவிப்பை எதிர்நோக்கி இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 08.07.2023 சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தொடங்கி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பணிக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் போட்டித்தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இவ்விலவச பயிற்சி வகுப்புகளில் நேரடியாக பங்கேற்று பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்