குத்தாலம், ஜூலை- 13: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம், கண்டியூர், ஆகிய கிராம ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம், தோட்டக்கலை துறையின் சார்பில் பயிர் சாகுபடி ஆகிய பணிகள் ஆய்வு. திருவாலங்காடு, மாதிரிமங்கலம், திருவாடுதுறை ஆகிய கிராம ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணி, ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்ர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்குதல் தொடர்பாக உழவன் செயலியில் விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணியினையும், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு போதிய மருந்துகள் இருப்பு உள்ளதா எனவும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு கணித பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களை சுணிதம் சம்பந்தமான கேள்வி எழுப்பி கரும்பலகையில் எழுதச் சொல்லி கற்றல் திறனையும், நாகமங்கலத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு விதைப் பண்ணையில் இயங்கி வரும் விதை சுத்திகரிப்பு நிலையத்தினையும், விதைப் பண்ணை வளாகத்தில் நெல் ஆடுதுறை 56 விதைப் பண்ணை நாற்றங்கால் பணியினையும், கண்டியூரில் தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிரந்தர கல் தூண் பந்தல் அமைக்கப்பட்டு பாலையா என்னும் விவசாயி புடலங்காய், பீக்கங்காய், பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், ஒரு எக்டரில் அரசு மானியம் ரூ. 20,000 நிதி உதவியுடன் சுத்திரிக்காய் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, திருவாலங்காடு நீராம ஊராட்சி, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 5.86 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சமையல் கூடம் கட்டுமான பணிகளையும், மாதிரிமங்கலம் கிராம ஊராட்சி மாதிரி மங்கலம் சிவராமபுரம் அக்ரஹாரம் சாலை, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.32 கோடி செலவில் மிக விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை பணிகளையும், திருவாடுதுறை கிராம ஊராட்சி திருவாலங்காட்டில் 15 வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய். 30 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வின் போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜே.சேகர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் ஜெயபால், ரமேஷ் குமார், குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி, குத்தாலம் ஒன்றிய குழு நலைவர் மகேந்திரன், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், மா சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரசு வளர்ச்சித் துறையினர், கால்நடை மருத்துவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்