காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, “காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்து , அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே 15.07.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.