சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள பச்சையப்பன் தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பு அறை முற்றிலும் சீர் செய்து வண்ணம் தீட்டப்பட்டு மாணவ மாணவிகளுக்கு தேவையான சித்திரங்கள் வரையப் பட்டு நம் சங்கம் சார்பில் இன்று காலை பள்ளிக்கு வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் (compound wall)சீர் செய்யப்பட்டு அதில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்போம் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான வரைபடங்கள் வரையப்பட்டது பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு
உணவு உண்ண 40 தட்டுக்கள் வழங்கப்பட்டது.
இந்த இனிய நிகழ்வில் சங்கத் தலைவர் Rtn.S.அரி தனராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ,Club Trainer Rtn.V. அழகப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நம் சங்க முன்னால் மாவட்ட ஆளுநர் திரு. Rtn. R.கேதார் நாதன் அவர்கள் புணர் அமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறையை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn. G. செங்குட்டுவன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உணவு உண்ணும் தட்டுகளை வழங்கினார்.
மேலும் ரோட்டரி மாவட்டம் மண்டலம் 14 ன் துணை ஆளுநர் Rtn.Dr.B. சுனில் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் முன்னாள் சங்க தலைவர்கள் S. நடன சபாபதி, மெஹபூப் உசேன் ,கே.ஜி நடராஜன், V. சக்திவேல், ரத்ன சபேசன் , பாபு சக்திவேல், உறுப்பினர்கள் கனகவேல் முகமது சாலி, பொருளாளர் நேசராஜ், பாலசுப்பிரமணியன் மற்றும் மற்ற சங்கங்களின் தலைவர் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்க செயலாளர் Rtn.கே.இளையராஜா நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி