கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடலூர் மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த முதற்கட்ட விண்ணப்ப பதிவிற்காக ஏற்கனவே நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார். அதன்படி விண்ணப்பதாரர்கள், தற்போது நடக்கும் முதற்கட்ட முகாமில் இதுவரை விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்யவில்லை என்றால், 3-ந் தேதி (அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை) மற்றும் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் தங்களுக்குரிய நியாய விலைக்கடை முகாம்களில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடை பகுதியில் நடைபெறும் .
முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.