கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சென்றடைந்த அவர் லெம்பலக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”அதிமுகவில் உள்ள யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை, ஆனால் அதிமுகவை பொறுத்தவரை யாரை அங்கீகரிக்க வேண்டும் யாரை கூப்பிட வேண்டும் என்று முடிவு செய்து கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைக்கின்றனர். நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை
ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் விரக்தி ஆக இல்லை. பாஜக தனது வேலையை செய்கிறது. அதிமுகவோடு அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் உள்ளது. கூட்டணி கட்சி கூட்டத்திற்கும் அழைப்புகள் விடுக்கப்பட்ட உள்ளது. அதனால் இதில் யாருக்கும் வருத்தம் கிடையாது. ED, சிபிஐ பொறுத்தவரை தன்னாட்சியாக செயல்பட கூடிய அமைப்புகள் அவர்கள் முறையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் யாராக இருந்தாலும் ஒரு அமைப்பின் மீது என் கண் வைத்துள்ளது அப்படி ஏதேனும் செய்ய நினைத்தாலும் கூட எந்த வழக்கையும் மூட முடியாது எல்லா வழக்கையும் நீதிமன்றம் கண்கொத்தி பாம்பாக பார்த்து வருகிறது
கொடநாடு வழக்கை பொறுத்தவரை அரசு இருக்கிறது, காவல்துறை உள்ளது, எஸ்பி இருக்கிறார்கள், எனவே இந்த வழக்கை நடுநிலைமையாக நடத்த வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு வழக்கு மட்டும் இன்றி எந்த ஒரு சென்சிடிவ் வழக்காக இருந்தாலும் குற்றவாளிகள் கண்டறிந்து கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும்.
கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு ஒற்றுமையாக இருப்பதை பற்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யார் வருகின்றார்களோ வரட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை கதவுகள் திறந்து தான் இருக்கிறது.
நான் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை. பாதயாத்திரை முடித்துவிட்டு கட்சிப் பணியை செய்யத்தான் நேரம் இருக்கிறது. என் வேலை கட்சியை வளர்ப்பது கட்சி வேலை செய்வது தான்.”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.