0
0
Read Time:1 Minute, 4 Second
கோவை சரவணம்பட்டியில் தேசத்தை காத்த தெய்வமாம் மகாத்மா காந்திஜி அவர்களுக்கு கோவில் கட்டி அவரது திருக்கோவிலில் “லீடர்ஸ் ஆப் இந்தியா” அனைத்து மத தெய்வங்களுக்கும் திருக்கோவில் அமைத்து அனுதினம் பூஜை செய்து பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பல லட்சக்கணக்கான தேசிய கொடிகள், தலைவர்களுடைய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இவற்றிற்காக நன்கொடையோ, டொனேஷனோ வாங்காமல் தனது சொந்த செலவில் வழங்கி வரும் சமூக சேவகர் மற்றும் இலவச மருத்துவருமான எஸ். தங்கவேல் அவர்களை தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.