மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2-ம் கட்ட முகாம் மயிலாடுதுறை வட்டத்தில் 53 பகுதிகள், குத்தாலம் வட்டத்தில் 29 பகுதிகள், சீர்காழி வட்டத்தில் 89 பகுதிகள் மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 31 பகுதிகள் என மொத்தம் 202 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் இன்று(சனிக்கிழமை) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.
டோக்கன் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 2-ம் கட்ட முகாம் தொடர்பான சந்தேகங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம்- 04364-222588, மயிலாடுதுறை தாலுகா அலுவலகம்- 04364-222456, குத்தாலம் தாலுகா அலுவலகம்- 85266-26166, சீர்காழி தாலுகா அலுவலகம்- 04634-270527. மற்றும் தரங்கம்பாடி வட்ட அலுவலகம்- 04364-289439 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.