0 0
Read Time:1 Minute, 32 Second

திருக்கடையூர், ஆக.13-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் ஊராட்சியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் அங்கன்வாடி கட்டிடத்தில் தரங்கம்பாடி துணை வட்டாட்சியர் விஜயராணி தலைமையில் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார், இம்முகாமில் புத்திரன் திடல், படுகை, ஏரிஓடை, மேலத்தெரு, நடுத்தெரு, பாரதிநகர், சித்தாங்கூர், கோழிபத்து, வளசரவாசல், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கினர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன், வருவாய் துறை ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %