தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 14:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப், சங்கரன்பந்தல் ஜெயதாரணி ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரத்தன் ஜுவல்லரி, நாகை- மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு சங்கரன்பந்தல் லயன்ஸ் சங்க தலைவர் பொறியாளர் ராஜகணபதி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் லயன்.சுப்பிரமணியன், பொருளாளர் லயன்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவிந்த் கண் மருத்துவர்மனை மருத்துவர்கள் சந்தீப், பிரபு ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளான கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்புரை நோய் நோய்கள் பரிசோதனைகள் உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இம்முகாமில் கண் பிரச்சனைகள் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் நோயாளிகள் மருத்துவக் குழுவினரால் முழு பரிசோதனை செய்யப்பட்டது தொடர்ந்து மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஜெயதாரணி ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ், வெங்கடேஸ்வரா ஜூவல்லரி உரிமையாளர் கார்த்தி, ரத்தன் ஜுவல்லரி உரிமையாளர் ரத்தன், லயன் ராஜாராமன் ஆகியோரின் ஏற்பாடுகளில் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஐ.ஓ.எல், லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, உணவு, தங்கு வசதி மற்றும் போக்குவரத்து செலவுகளை இலவசமாக வழங்கினர்.
முகாமில் சங்கரன்பந்தல் சுற்றியுள்ள உத்திரங்குடி, நெடுவாசல், பட்டவரம், இலுப்பூர், திருவிளையாட்டம், கூடலூர், நல்லூச்சேரி, பூதனூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், நல்லாடை, கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவதற்கான கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் முகாமை அமைத்த லயன்ஸ் கிளப், ஜுவல்லரி உரிமையாளர்கள், அரவிந்தன் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்