தரங்கம்பாடி, ஆக-15:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரோஜா (65) இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீ முழுவதும் பரவாமல் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், புடவை, போர்வை, பாய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். இதேபோல் அரசின் சார்பில் நிவாரணமாக ரூ.5 ஆயிரம், அரிசி மண்ணெண்ணெய் புடவை, வேட்டி நிவாரண பொருட்களை வட்டாட்சியர் சரவணன் வழங்கினார்.
இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக், திமுக நிர்வாகிகள் முசாகுதீன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.பி.ராஜா, பைலட், மாவட்ட பிரதிநிதிகள் கே.எஸ்.எஸ்.கருணாநிதி, சடகோபன் மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.ஆயப்பாடியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம்
தரங்கம்பாடி, ஆக-15:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரோஜா (65) இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீ முழுவதும் பரவாமல் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், புடவை, போர்வை, பாய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். இதேபோல் அரசின் சார்பில் நிவாரணமாக ரூ.5 ஆயிரம், அரிசி மண்ணெண்ணெய் புடவை, வேட்டி நிவாரண பொருட்களை வட்டாட்சியர் சரவணன் வழங்கினார்.
இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக், திமுக நிர்வாகிகள் முசாகுதீன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.பி.ராஜா, பைலட், மாவட்ட பிரதிநிதிகள் கே.எஸ்.எஸ்.கருணாநிதி, சடகோபன் மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்