மயிலாடுதுறை, ஆக.18-
மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்தார். எம்.பி.ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகத்தனர்.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை வழங்கி பேசுகையில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 7.18 கோடி மதிப்பீட்டில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் பொறுத்தப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள், 46ஆயிரத்து 260 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 12 ஆயிரத்து 526 தனியார் பள்ளிகள், 3 ஆயிரத்து 83 அனைத்து வகை கல்லூரிகள் உள்ளது இதில் பயிலும் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. விடுபடுபவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தி மாத்திரைகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் ஆரம்பசுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் என்று ஆயிரத்திற்கும்மேற்பட்டவைகள் கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் வாடகை இடங்களில் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் சுகாதாரத்துறையின் பங்கு மிகவும்முக்கியமானது அனைத்து வசதிகளையும் ஒரே ஆண்டிற்குள் செய்துமுடிக்க வேண்டுமென்றால் பட்ஜெட்டில் மொத்த நிதியையும் சுகாதாரத்துறைக்குத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அது இயலாதகாரியம் அதனால்தான் படிப்படியாக நமது முதல்வர் நிதிஒதுக்கீடு செய்து கொடுத்து வருகிறது.
கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்வது கிடையாது. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு எம்.பி.,எம்.எல்.எ.க்கள் நிதிஒதுக்கீடு செய்துகொடுத்தால் சுகாதாரத்துறைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்றார்.
தொடர்ந்து மயிலாடு:துறை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்ஐ ஸ்கேன் மையத்தை தொடங்கிவைத்து 45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் குத்தாலம் ஒன்றியம் கிளியனூர் ஊராட்சியில் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆரம்பசுகாதாரநிலைய புதிய கட்டடத்தை திறந்துவைத்ததோடு, சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆரம்பசுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு, நாங்கூர் துணைசுகாதார நிலைய கட்டம், சீர்காழி அரசு ஆஸ்பத்திரி ஒலி புகா அறை ஆகிய கட்டடங்களின் கல்வெட்டை திறந்துவைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.
இதில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, நகராடசி தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சி, மகேந்திரன், துணை இயக்குனர் அஜித்பிரபுகுமார், இணை இயக்குனர் நிர்மல்சன், இணை இயக்குனர் குருநாதகந்தையா, அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்