தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 24:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மயிலாடுதுறை எம்பி நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி தாலுக்கா காட்டிச்சேரி ஊராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையான அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளூர் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இப்பள்ளி பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடம் அரசாங்கத்தால் பெறப்பட்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சோமண்ணா, காட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சுவாமிநாதன், திருவிடைக்கழி ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ராஜா, தலைமையாசிரியர் கனகலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் காந்திமதி, பிரேமா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்