டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் டி.என்.பி.எஸ்.சியின் குரூப்- 2, 4 தேர்வுகளுக்குட்பட்ட பணிகளுக்கானபோட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையங்களால் அறிவிக்கப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சீர்காழியில் எல்.எம்.சி. மைதானத்திற்கு அருகில் திருக்கோலக்கா தெருவில் உள்ள ரோட்டரி சங்க கட்டிடத்தில் வருகிற 28-ந் தேதி (திங்கட் கிழமை) முதல் தொடங்குகிறது.
இந்த பயிற்சி அடுத்த மாதம் 1-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுபவமிக்க பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
எனவே, விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்துகொண்டு இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் நேரில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.