0 0
Read Time:2 Minute, 9 Second

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் நேற்று (2-9-2023) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், த/பெ. மகேந்திரன் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

உயிரிழந்த சக்திவேல் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்திரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %