0 0
Read Time:1 Minute, 21 Second

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரும், பிரக்யா ரோவரும் வெற்றிகரமாக பிரிந்து சென்று, தங்களது பணிகளை சிறப்பாக செய்து வந்தது.

நிலவில் இருந்து அனுப்பிய புகைப்படங்களை அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வந்தது. இந்நிலையில், பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் SLEEP MODE-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி குறைந்ததால் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டரில் இருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டு விட்டதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %