பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் குறித்து பேசிய இளைஞர்கள் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோரைபதவி நீக்க கூறி தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த பா.ஜ.க வினரை கண்டித்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதவியை ராஜினாமா செய்யகூறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க வினர் மற்றும் அதன் தலைவர் அண்ணாமலையை கண்டித்து தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுத்து போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினருமான ஜெமினி எம். என். ராதா காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஸ்டிபன்முத்துபாண்டி வரவேற்றார்.
துணைத் தலைவர்கள் பி.செல்வக்குமார் பொதுசெயலாளர்கள் ரகோத்தம்மன் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் ஆர்.சம்மந்தமூர்த்தி ஜி.ஆறுமுகம் பொதுச்செயலாளர்வேல்முருகன் இந்திரா தேவதாஸ்
பி ஜெயச்சந்திரன் ஆகியோர் காந்திசிலையின் கையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் சுயநல அரசியலை கண்டித்து எழுதப்பட்ட மனுவை வழங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர்கள் எஸ் செந்தில்குமார் விக்கி சூரியபிரகாஷ்
பரணி ஆனந்த் மணி கண்ணன் விக்னேஷ் மணி ரூபன் பிரபு மாதவன் சபரீஷ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தெய்வீக பக்தர்கள்பேரவை பொது செயலாளர் ஏ.ராஜசேகர் நன்றி கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் காந்தி சிலையிடம் மனு கொடுத்து சனாதனம் குறித்து உண்மைக்கு மாறாக பேச வேண்டாம் என்று கூறி ஒன்றிய பாஜக அரசையும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷமிட்டு கலைந்து சென்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி