அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு காஞ்சி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி , நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காலை முதல் சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்து வருகிறது. இதேபோல் இன்று வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
இதனிடையே திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.