0 0
Read Time:4 Minute, 33 Second

உடல் உறுப்பு தானத்திற்கு அரசு மரியாதை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மிக உயர்ந்த மனித மாண்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுஎன்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!

அவர் குறிப்பிடுகையில்,

அரசு மரியாதையுடன் இறந்தவர்களின் உடலை அடக்கும் செய்வது என்பது நமது நாட்டைப் பொறுத்தவரை பெரும் தலைவர்களுக்கும், போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கும், உயர் தியாகம், வீரதீர செயல் செய்தவர்களுக்கும் மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இனி உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் அனைவருக்கும் அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவிப்பாகும்.

குறிப்பாக இறந்த பிறகு நம்முடைய உடலானது எரியூட்டப்பட்டு அல்லது மண்ணில் புதைக்கப்பட்டு விடுவது வழக்கம் என்றாலும் கூட மனிதப் பிறவி எடுத்ததன் பலன் என்பது அடுத்தவருக்கு உதவிடுதல் என்னும் உயர் நோக்குத்துடன் இருப்பதே ஆகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்கின்ற பொழுதும் உதவுதல், மறைந்த பிறகும் உதவுதல் என்னும் கோட்பாட்டோடு பலர் தங்கள் மறைவுக்குப் பிறகு உடலை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி விடவும், சிலர் கண் தானம் செய்ய விரும்பி எழுதி வைப்பதை அனைவரும் போற்றுகின்றோம். உடல்உறுப்பு தானம் என்னும் உன்னதமான காரியம், செய்வதன் மூலம் பலருக்கு உயிர் கொடுக்கலாம். தற்போதைய சூழ்நிலையில், சிறுகுடல், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல், இதயம் மற்றும் தோல் திசுக்கள் போன்ற உறுப்புகளுக்கு அதிக தேவை உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மக்கள் விபத்துக்களால் இறக்கின்றனர், மூளைச் சாவு அடைந்தவர்களின், உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு உயிர் கொடுக்கின்றன. 

ஒரு கொடையாளரிடமிருந்து பெறப்படும் உறுப்புகள் பெரும்பாலும் 6 முதல் 72 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டு, குறைந்தது எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மூளை சாவிற்கு பிறகு அவர்களுடைய உறுப்பு மற்றவரின் உடலில் பொருத்தப்பட்டு உயிர் வாழ்வது என்பது தொடர்ந்து அவர் இவ்வுலகில் வாழ்வதாகவே எடுத்துக் கொள்ளப்படும். அவ்வகையில் இப்பெறும் உதவியை செய்திட முற்படுவோரின் தானத்திற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதுமில்லை என்பது உறுதி. இருந்த பொழுதிலும் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் இனி வரும் காலத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மிக உயர்ந்த மனித மாண்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு அனைவரின் சார்பில் நெகிழ்ச்சி மிகுந்த நன்றியினை நாம் தெரிவித்துக் கொள்வோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %