அவர் குறிப்பிடுகையில்,
மயிலாடுதுறை ரயில் நிலையம் இந்திய அரசின் ரயில்வே துறை சார்பில் அம்ரி பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு புதுபொலிவு பெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் குறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடங்கள், சாலைகள், நுழைவாயிலை நவீன முறையில் அழகு படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதனை மயிலாடுதுறை மக்கள் மிகவும் வரவேற்கிறோம். மேலும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வாயிலில் நூற்றாண்டை கடந்து மக்களுக்கு நிழல் தருவதோடு கூட ஆயிரக்கணக்கான பறவைகள் குடியிருக்க இடம் கொடுத்து அடர்ந்து விரிந்து பரந்த அரச மரங்கள் ஆங்கிலேயர் காலத்துபழமை வாய்ந்த மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பறவை இனங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் தகுதிமிக்கதாகவும் இருக்கின்ற மரங்களை அகற்றிவிட்டு சாலைகள் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. சோலைவனமாக காட்சியளிக்கும் மயிலாடுதுறை ரயில் நிலையம், மேற்படி மரத்தை வெட்டுவதால் நூற்றுக்கணக்கான பறவை குடும்பங்கள் அளிக்கப்படுவதோடு மக்களுக்கும் நிரந்தர நிழல் தரும் மரமே இல்லாமல் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும். ரயில்வேத்துறை இதுகுறித்து மறுபரிசீலனை செய்து மேற்படி அரச மரத்தினை அகற்றாமல் அதனைச் சுற்றி சாலை வருவதற்கான திட்டத்தை மாற்றி செயல்படுத்த முன்வர வேண்டும். அல்லது
அந்த மரத்தை அப்படியே வேறு இடத்தில் வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் மரமும் காப்பாற்றப்படும். இயன்ற அளவிற்கு அதில் குடியிருக்கின்ற பறவை குடும்பங்களும் காப்பாற்றப்படும் என்பது உறுதி. ஆகவே தென்னக ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறை மக்களின் காதுகளில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற பறவைகளின் மகிழ்ச்சியான சத்தங்கள், எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு மாற்று ஏற்பாடும், நடவடிக்கும் எடுக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்திற்கு பொது மக்களின் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.