சி.ஐ.எஸ்.எப். காவல்துறையினருடன், மருத்துவ மாணவர்கள் இணைந்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நட்டனர்.
சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சுற்றுசூழலை பாதுகாக்கவும், பசுமை வளாகமாக மாற்றும் வகையிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சி.ஐ.எஸ்.எப். ஐ. ஐ.ஜி. ஜோஸ்மோகன், நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி விவேக் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில், சி.ஐ.எஸ்.எப். காவல்துறையினரும் , தாகூர் மருத்துவ கல்லூரி மாணவர்களும் இணைந்து ஒரு மாணவர்களுக்கு ஒரு மரம் விதம் 3000 மரக்கன்றுகளை நட்டனர். ஒரே நேரத்தில் மாணவர்கள் மற்றும் சி.ஐ.எஸ்.எப். காவலர்கள் 3 ஆயிரம் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அருள்செல்வி விவேக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மறைந்த எனது கணவரின் கனவு திட்டமான 1 கோடி மரக்கன்றுகளை நடும் பணியில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இதுவரை 37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நான் மறைந்த பிறகும் கூட எனது குடும்பத்தினர் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபடுவார்கள்” என அவர் தெரிவித்தார்.