வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் திருவள்ளூரில் பள்ளி , கல்லூரிகளுக்கும், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 14 ஆம் தேதி காலை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் திருவள்ளூரில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (நவ.15) விடுமுறை, மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
மேலும், கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.15) விடுமுறை, சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.