இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது கடலுக்கு சென்ற மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.