0 0
Read Time:2 Minute, 39 Second

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் பெருமழை பெய்து வருகிறது.

வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் (டிச.3) நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் சென்னை பெருநகரில் 11 இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் பெருமழை பெய்து வருகிறது. நேற்று (நவ.03) சென்னையின் பல்வேறு இடங்களில் பதிவான மழை அளவு:

வளசரவாக்கம் 171 மி.மீ.,
மலர் காலனி 162மி.மீ.
சோழிங்கநல்லுார் 145 மி.மீ.
காட்டுப்பாக்கம் 144 மி.மீ.
கோடம்பாக்கம் 140 மி.மீ.
கொளத்துார் 137 மி.மீ.
முகலிவாக்கம் 124 மி.மீ.
தேனாம்பேட்டை 124 மி.மீ,
மதுரவாயல் 123 மி.மீ.
அண்ணா நகர் 122 மி.மீ,
அம்பத்துார் 121 மி.மீ.
மீனம்பாக்கம் 120 மி.மீ,
வானகரம் 118 மி.மீ.
டி.வி.கே.நகர் 117 மி.மீ.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %