சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர் கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் அப்பு சந்திரசேகர் சிதம்பரம் நகரில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வார்டுகளிலும் மழைநீர் தேங்கவில்லை எனது வார்டில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட நகர மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தார் முத்துக்குமார் நகர மன்ற துணைத் தலைவர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட வீடுகளில் இழந்த மக்களுக்கு நகராட்சி சொந்தமான இடத்தில் வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதேபோல் பல நகர மன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்தனர். அதற்கு நகரமன்றத் தலைவர் கூறுகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் சிதம்பரத்தில் மழை நீர் பாதிப்பு ஏற்படவில்லை மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கையை அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராஜன் மணிகண்டன் ஜெயசித்ரா பாலசுப்ரமணியன் இந்துமதி அருள் சுனிதா மாரியப்பன் தஸ்லிமா கல்பனா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி