புவனகிரி அருகே உள்ள பு. ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றின் கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதனால் வரை தடிப்பனை கட்டப்படாததால் உப்பு நீர் ஊருக்குள் புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதால் குடிநீர் மற்றும் விவசாயம் சாகுபடி செய்ய முடியாமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றனர்.
எனவே பு. ஆதிவராக நல்லூர் வெள்ளத்தில் குறுக்கே தடுப்பணை கட்ட கோரி புவனகிரி பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழி தேவன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி சந்திரகாசி அமைப்பு செயலாளர் முருகுமாறன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். இதில் கலந்து கொண்டவர்கள் ஆதிவராக நல்லூர் வெள்ளாளில் குறுக்கே தடுப்பணை கட்ட கோரி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருக மணி புவனகிரி ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுதேவன் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் விநாயகமூர்த்தி கருப்பன் முனுசாமி ரகுராமன் மாவட்ட மாணவர் அணி தலைவர் வீரமூர்த்தி உள்ளிட்டோர் நிர்வாகிகள் விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி