0 0
Read Time:4 Minute, 24 Second

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் முடிவுகளின்படி தென் இந்தியாவில் சீட்டுகளை இந்தியா கூட்டணி வெல்லும் என தெளிவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை INDIA – கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் ‛மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு டிச.,15 முதல் 2024 ஜன.,28 வரை 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதன்படி முடிவுகள் வெளியாகியுள்ளன.

சி-வோட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளின்படி தென் இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறைவான இடங்களையே பிடிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.

கர்நாடகா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 28
தேசிய ஜனநாயக கூட்டணி-24
இந்தியா கூட்டணி -4

ஆந்திர பிரதேசம்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 25
தெலுங்கு தேசம் கட்சி – 17
ஓய்எஸ்ஆர்சிபி – 08

தெலங்கானா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 17
இந்தியா கூட்டணி -10
தேசிய ஜனநாயக கூட்டணி – 03
பி.ஆர்.எஸ்.,–03
ஏஐஎம்ஐஎம் -01

கேரளா :

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 20
இந்தியா கூட்டணி -20

தமிழ்நாடு

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 39
இந்தியா கூட்டணி – 39

இதன் அடிப்படையில் தென் இந்திய மாநிலங்களில் உள்ள 129 இடங்களில் மொத்தமாக 27 இடங்களில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள 100க்கும் மேற்பட்ட இடங்களை இந்தியா கூட்டணி மற்றும் மாநிலக் கட்சிகளான் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் , பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
50 %