0 0
Read Time:4 Minute, 14 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சங்கரன்பந்தல் அருகே முனிவளங்குடி பிள்ளையார் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியன். அவர் மனைவி அஞ்சம்மாள். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

கூலி வேலை
இவர்களது மகன் பாலதண்டாயுதம் தங்களது ஏழ்மை நிலையை உணர்ந்து சிறு வயது முதலே கூலி வேலைக்கு சென்று தனது பள்ளி படிப்பை சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தார். மேலும் ஏழ்மை நிலை காரணமாக படிக்க வசதியின்றி ஏழு ஆண்டுகள் படிக்க முடியாமல் பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று உள்ளார்.

வழக்கறிஞர்
இருப்பினும் தான் வழக்கறிஞராக வேண்டும் என்ற விடா முயற்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எழுத்தராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் இளங்கலை படிப்பை முடித்து பின்னர் திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அரசு சட்ட கல்லூரியில் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக பதிவு செய்து மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

உரிமையியல் நீதிபதி
இந்நிலையில் பெற்றோர் இறந்துவிட தனக்கு திருமணமாகி தனது ஊரிலேயே வசித்து வந்தவர் வழக்கறிஞராக இருக்கும் பொழுது தான் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று தனது 36வது வயதில் தற்பொழுது உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.

நீதிபதியாக இளைஞர்
மேலும் 2015 க்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நீதிபதியாக இளைஞர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலதண்டாயுதத்திற்கு மயிலாடுதுறை வழக்கறிஞர் அலுவலகத்தில் மாலை அணிவித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

பலர் வாழ்த்து
மேலும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஏழ்மை நிலையிலும் விடா முயற்சியிலும் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள பாலதண்டாயுதத்திற்கு வீடு தேடி சென்று பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த கண்ணீர்
இந்நிலையில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலதண்டாயுதம் தன்னுடைய ஏழ்மை நிலையில் தன்னுடன் இருந்த தனது பெற்றோர் தற்பொழுது தான் நீதிபதியாக தேர்வாகியுள்ள நிலையில், அதனை காண தன்னுடன் இல்லையே என ஆனந்த கண்ணீருடன் பேட்டி அளித்தார். எவரும் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் இருந்தால் சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %