சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கா் இருக்கையின் சாா்பில், உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடைபெற்ற விழாவில், அம்பேத்கா் இருக்கை உதவிப் பேராசிரியா் ராதிகாராணி வரவேற்றாா்.
பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினா் அரங்கபாரி சிறப்புரை ஆற்றினாா். கலைப்புல முதல்வா் கே.விஜயராணி வாழ்த்துரை வழங்கினாா். அம்பேத்கா் சட்டக் கல்லூரி பேராசிரியா் சி.உஷா சிறப்புரை ஆற்றினாா். விழாவில் பல்கலைக்கழக புல முதல்வா்கள் அங்கையா்கண்ணி, கோதைநாயகி, அருட்செல்வி, பல்கலைக்கழக பல்வேறு துறை இயக்குநா்கள் ரகுபதி, சரண்யா, ஜெயபாரதி, சுந்தரி, சுபாஷினி ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சாா்பில், அகில இந்திய அளவில் கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள் அம்பேத்கா் இருக்கையின் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.
ஒருங்கிணைப்பாளா் சௌந்தரராஜன் நன்றி கூறினாா்.
பல்கலைக்கழக நூலகத் துறை பேராசிரியா் சிவராமன், சச்சிதானந்தம், விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை அம்பேத்கா் இருக்கையின் பேராசிரியா்கள் க.சௌந்திரராஜன், வீ.ராதிகாராணி செய்திருந்தனா்.