0 0
Read Time:2 Minute, 56 Second

எலான் மஸ்க் யூடியூப் வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பிரபலமான செயலியான எக்ஸ் தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக, புதிய வீடியோ செயலியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வருகிறது. எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான யூடியூபின் சந்தையை பாதிக்கக்கூடும்.

எக்ஸ் தளத்தை லாபகரமாக மாற்றும் முயற்சியில், 3 மணி நேர முழு திரைப்பட நீளத்திலான வீடியோக்களையும் அதில் பதிவிட எலான் மஸ்க் வசதிகள் செய்துள்ளார். பின்னர் எக்ஸ் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மேற்படி வீடியோக்களை ஸ்மார்ட் டிவிக்களில் காண ஏதுவாக வீடியோ செயலி ஒன்றையும் எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார்.

சீனாவில் பயன்பாட்டில் இருக்கும் வீசாட் சமூக ஊடக செயலிக்கு இணையாக எக்ஸ் தளம் என்பதை, அனைத்துக்குமான சூப்பர் ஆப் ஆக மாற்றும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபட்டிருக்கிறார். இந்த வரிசையில் கடந்த அக்டோபர் மாதம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை எக்ஸ் தளத்தின் பயனர்கள் பெறுவதற்கான வசதியை எலான் மஸ்க் வெளியிட்டார். அடுத்தபடியாக, பணப்பரிவர்த்தனைக்கான அனுகூலங்களையும் எக்ஸ் தளத்தில் உள்ளடக்க அவர் முயற்சித்து வருகிறார்.

இந்த வீடியோ செயலி ஒப்பீட்டளவில் நடப்பிலிருக்கும் யூடியூப்க்கு இணையான வசதிகளை கொண்டிருக்கும். முதற்கட்டமாக அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் எலான் மஸ்கின் வீடியோ செயலியை பெற இருக்கின்றன. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த வசதிக்காக, மாகாணங்கள் தோறும் வங்கிகள் வாயிலாக எக்ஸ் தளத்துக்கான அனுமதி பெறும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %