0 0
Read Time:3 Minute, 17 Second

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி 1 என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை நிறைவுச் செய்து அதிரடி காட்டியுள்ளது தி.மு.க. தலைமை.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 09) இரவு 07.30 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவை தொகுதி என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை நிறைவுச் செய்தது தி.மு.க. தலைமை.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தி.மு.க வின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %