சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 11) மதியம் 02.30 மணியளவில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கறிஞர்கள், வாதங்களை முன் வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றிருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலகம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.