சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏல் ஆகவுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன் தினம் (மார்ச் 11) மதியம் 02.30 மணியளவில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கறிஞர்கள், வாதங்களை முன் வைத்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏல் ஆகவுள்ளார். பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியனதை அடுத்து, அதனை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும். இதனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி விரைவில் சட்டமன்ற உறுப்பினர் ஆவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.