சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் V. நடனசபாபதி தலைமையேற்றும் சங்கத்தின் செயலாளர் . G. ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தியும், முன்னாள் துணை ஆளுநர் M. தீபக்குமார் முன்னிலை ஏற்றும், சார் ஆட்சியர் செல்வி. ரஷ்மிராணி இ.ஆ.ப. அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக் கூறி மிகச் சிறந்த ஆளுமைக்குரிய விருதும் வழங்கப்பட்டது.
மேலும் சார் ஆட்சியரின் கரங்களால் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக சிதம்பரம் வட்டாட்சியர் ப. ஹேமா ஆனந்தி, நகராட்சி ஆணையாளர் மல்லிகா, சிதம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் . K. விமலா, மேலும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் S.R. செல்வி, S. பொற்செல்வி, மருத்துவ சேவையை பாராட்டி மார்பக புற்று நோய் நிபுணர் டாக்டர். M. பிரேமா அவர்களுக்கும், பல் மருத்துவர் R. ஸ்ரீவித்யா மேலும் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் K. நிர்மலா மற்றும். கோ.கீதா உதவி பேராசிரியர் வணிகவியல் துறை பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர் இவர்களுக்கு கல்வியாளர் விருதும் மகளிர் தின விருதும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியல் மூத்த உறுப்பினர் P. பன்னாலால், மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் N. கேசவன் முன்னாள் தலைவர் G. சீனிவாசன் பொறியாளர் K. புகழேந்தி மற்றும் சங்கத்தின் பொருளாளர் R. அருள் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சங்க மூத்த உறுப்பினர் த. S.R. செல்வி நன்றி கூற விழா இனிதே நடைபெற்று முடிந்தது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி