0 0
Read Time:2 Minute, 42 Second

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, வேட்புமனு தாக்கலுக்காக ஆறு நாள்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் (மார்ச் 25) மனுக்களை அளித்தனர். அதனால், ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 402-ஆக இருந்தது. அதில், ஆண்கள் சார்பில் 341 மனுக்களும், பெண்கள் தரப்பில் 61 மனுக்களும் தாக்கலாகின. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளான மார்ச் 20-ம் தேதி 22 மனுக்களும், 21-ம் தேதி 9 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 22-ம் தேதி 47 மனுக்களும், 25-ஆம் தேதி 402 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அப்போது சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இதற்கான நடைமுறைகள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் நடைபெறும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கோரினால், குலுக்கல் முறை பின்பற்றப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %