0 0
Read Time:2 Minute, 18 Second

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன். கடந்த மார்ச் 27ம் தேதி தனது வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கான படிவத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார் .அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர். இந்நிலையில் விசிக சார்பில் பானை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தது. இதனை தேர்தல் ஆணையம் மறுக்கவே, உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %