0 0
Read Time:4 Minute, 7 Second

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:

மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர மறுத்துவிட்டார். வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம். தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ரூ. 1 லட்சம் நிதி உதவியுடன் பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம். காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை உடனே நிரப்புவோம். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல், பட்டதாரிகளுக்காக வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றுவோம்.

தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நீட் தேர்வு பெரும் பிரச்னையாக நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றுவோம். பிரதமர் மோடி, மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியுள்ளார். நாங்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம்.

வறுமையில் உள்ள குடும்ப பெண் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இந்தியா கூட்டணி வைத்துள்ளது. அரசு வேலைகளில் 50 சதவீத பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டின் மீனவர்களை பிரதமர் மோடி முழுமையாக மறந்துவிட்டார். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். பண்பாடு, கலாசாம், மொழிக்காக நாங்கள் தொடுத்துள்ள யுத்தம் தான் இந்த தேர்தல். தமிழ்நாட்டு மக்களோடு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும்.

தமிழ் என்பது மொழி அல்ல, வாழ்க்கை முறை. தமிழ் மொழி மீதான தாக்குதலை தமிழர்கள் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன். நாட்டின் பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் உள்ளன. ஒன்றுக்கு ஒன்று எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல. சமூகநீதியில் எவ்வாறு நடைபோட வேண்டும் என்பதை நாட்டுக்கே தமிழ்நாடு கற்றுக்கொடுள்ளது. தமிழ்நாட்டிலிருந்துதான் பன்பாட்டுத் தரவுகளை அனைவரும் படிக்க முடியும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %