0 0
Read Time:3 Minute, 57 Second

உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘நான் முதல்வன் திட்டம்’ செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு சார்பில் ‘கல்லூரி கனவு – 2024’ என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும், பள்ளி கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சென்னை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அரசு பள்ளிகளில் படித்தாலும் உயர் கல்வி கனவு நனவாகும் என்பதற்கான புதிய வழிகாட்டியாக நான் முதல்வன் திட்டம் இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ்தாஸ் மீனா, தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கல்லூரி பயிலும் மாணாக்கர்களின் சராசரி அதிகமாக உள்ளது. ஆனாலும் கூட தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயத்தை நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு படிப்பில் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தான் எங்களின் திட்டமாக உள்ளது என்றார்.

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து யாரெல்லாம் கல்லூரியில் சேராமல் இருக்கிறார்களோ அவர்களை கண்டறிய நாங்கள் குழு அமைத்துள்ளோம் என்றும் அதன் மூலமாக அவர்களை கண்டறிந்து அந்த மாணவர்களை ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்து உயர் கல்வி படிக்க வைக்க திட்டம் வைத்துள்ளதாகவும் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் படித்த கல்லூரிகளில் பயணம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது போல இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழக அரசின் நோக்கம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் 100 சதவீதம் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %