10/05/2024,அச்சய திதியை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து காலை 8 மணி அளவில் சிதம்பரம் மாலைகட்டி தெருவில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைர்.வி.நடனசபாபதி தலைமையில் அச்சயதிதியை விழா நடைபெற்றது.
இவ்விழாவின் ஏற்பாடுகளை மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் சாசன செயலாளர் முனைவர்.தீபக்குமார் அவர்கள் செய்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மிராணி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கரும்பு சார் வழங்கினார்கள். மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளையின் தலைவர் திரு.கமல் கிஷோர் ஜெயின் நீர் மோர் வழங்கினார் இந்நிகழ்சியின் மூலமாக 500க்கும் மேற்பட்ட பாதசாரிகளுக்கு கரும்பு சார் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குமராட்சி அனிதா ஜிவல்லரி உரிமையாளர் தருண் சுமைதூக்கும் தொழிலாளர் 15 நபர்களுக்கு புத்தாடை வழங்கி அவர்களை கௌரவ படுத்தினார் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திரு. A,விஸ்வநாதன், P,பன்னாலால் ஜெயின் வழக்கறிஞர் D,ஜெயபாண்டியன், மக்கள் மருந்தக ம் கேசவன், பொறியாளர் K,புகழேந்தி,K,இந்தர்,L,ஜினேந்தர் சஞ்சீவிகுமார் பழனியப்பன், T,ஜெயராமன் D, ஹிராசந்த் K,சௌரப் S,பொற்ச்செல்வி கனேசன் K,சீனிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். விழா இனிதே நிறைவற்றது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி