0 0
Read Time:2 Minute, 21 Second

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் கடந்த மே 04ம் தேதி காலை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே அவர்கள் வந்த இன்னோவா காரில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலில், தேனி வட்டாட்சியர் ராணி முன்னிலையில் சோதனை செய்ததில், 409 கிராம் கஞ்சா மற்றும் 15,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதுவரை, அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ – வின் போலியான ஆவணங்களை தயாரித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சவுக்கு இணையதளத்தின் ஆசிரியரும், யூட்டியூபருமான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது இதுவரை பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %