0 0
Read Time:3 Minute, 35 Second

சிதம்பரம் ரோட்டரி மாவட்ட ஆளுநர் அவர்களின் அலுவல் நிமித்த வருகையின் போது நடந்த செயல் திட்டங்கள் விழாவிற்கு தலைவர் Dr.V. நடனசபாபதி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள் துணை ஆளுநர்கள் பொறியாளர் M. தீபக்குமார், Dr. P. முஹம்மது யாசின், RM.ST. சுப்பையா மற்றும் மாவட்ட அவைக்காவலர் A. விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். சங்க செயலளர் பேராசிரியர் G. ஆறுமுகம் ஆண்டு அறிக்கை வாசித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக Rtn. K.A. பாண்டியன் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் துணை ஆளுநர் பேராசிரியர் B. சுனில்குமார் மாவட்ட ஆளுநர் முனைவர். G. செங்குட்டுவன் அவர்களை அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஆளுநர் முனைவர். G. செங்குட்டுவன் சங்கத்தினை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புறையாற்றினார்கள், மேலும் மாவட்ட ஆளுநரின் கரங்களால் ரூபாய் 210000 மதிப்பீட்டில் ரோட்டரி பூங்காவை திறந்து வைத்ததுடன் மூன்று பெண் பயனாளிகளுக்கு 20000 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும் . கிரீடு தொண்டு நிறுவன முதியோர் இல்லத்திற்கு ரூ.10000 மதிப்பீட்டில் சமையல் பாத்திரங்களும், கிரீடு தொண்டு நிறுவன அபளை பெண்களுக்கான இல்லத்தில் உள்ள 10 பயனாளிகளுக்கு ரூபாய் 10000 மதிப்பீட்டில் ஆடைகள் வழங்கப்பட்டது திருமண உதவி சீர் வரிசை சாமான்கள் ரூபாய் 20000 மதிப்பிட்டில் வழங்கப்பட்டது.

மேலும் ரோட்டசி அறக்கட்டளைக்கு ரூபாய் 55000 காசோலை வழங்கப்பட்டது. மேலும் சிநம்பரம் ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர் T. ஜெயராமன், சிதம்பரம் மீட் டவுன் ரோட்டரி சங்கம் தலைவி K.நிர்மலா, செயலாளர் K. நடராஜன், கொள்ளிடம் முன்னாள் துணை ஆளுநர் ஷாஜகான், S. முகில்வளவன் மற்றும் M. குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள் மேலும் இந்நிகழச்சியில் மூத்த உறுப்பினர் P. பன்னாலால் ஜெயின், $ முனுசாமி, C. டேவிட் ஏகாம்பரம், P. சஞ்சிவகுமார், P. பொற்செலவி, பொறியாளர்கள் N. கோவிந்தராஜன், S. புகழேந்தி, K. பழனியப்பன, மற்றும் G.குமரவேல், மக்கள் மருத்தகம் உரிமையாளர் N. கேசவன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் M.D. ஜெயபாண்டியன் N. பாவிக் பட்டேல் G.P. விஜயபாலன் வருங்கால தலைவர் Dr. V. ரவிச்சந்திரன் உட்பட கலந்து கொண்டார்கள். இறுதியாக சங்க பொருளாளர் R. அருள் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %