0 0
Read Time:2 Minute, 2 Second

ஐபிஎல் 2024 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 தொடரின் பரபரப்பான ப்ளே ஆஃப்ஸ் தகுதி சுற்றுக்கான் ஆட்டம், நேற்று நடைப்பெற்றது. சென்னை-பெங்களூரு இடையே நடைப்பெற்ற இந்த போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைப்பெற்றது.

இதில், எப்போதும் டாஸ் வெல்லாத சென்னை அணி, நேற்று டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலாவது இன்னிங்க்ஸ் முடிவில் 218 ரன்களை குவித்து சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்க, ஆர்சிபி அணிக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தது.

அடுத்தடுத்து கேட்ச்களை மிஸ் செய்தாலும், அடுத்தடுத்த ஓவரில் சென்னை அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து, போட்டியின் முடிவில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பெங்களூரு அணி. இந்த தோல்வியை தாள முடியாமல் சில சென்னை அணி வீரர்கள் இணையத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %